இளைஞர்களை தவறான வழிகளில் செல்லாது ஒரு நாட்டின் சிறந்த நற்பிரஜையாக மாற்றுவதற்கான மிகச் சிறப்பான செயற்பாடுகளை உள்ளடக்கிய விருது நிகழ்வே எடின்பரோ சர்வதேச கோமகன் விருது ஆகும்.
இவ் விருது நிகழ்வானது 1956 இல் பிரித்தானிய முடிக்குரிய அரசரினால் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 140 ற்கும் மேற்பட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 'எடின்பரோ சர்வதேச கோமகன் விருது' க்குரிய தலைமைக் காரியாலயம் லண்டன் மாநகரிலும் இலங்கைக்குரிய பிராந்திய காரியாலயம் அவுஸ்ரேலியாவிலும் அமைக்கப்பட்டுள்ளன. இப் பிராந்திய காரியலாயத்தின் முகாமையாளர்களில் ஒருவர் தனுஜா விஜயசிங்க ( IAC Manger ) இவர் இலங்கை நாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் விருது நிகழ்வானது தங்கம், வெள்ளி , வெண்கலம் என வகைப்படுத்தப்பட்டு காணப்படுவதுடன் இளைஞர்களை வளப்படுத்தக் கூடிய சேவை செய்தல், திறமையினை வளர்த்துக் கொள்ளல், உடலியற்கச் செயற்பாடு மற்றும் சாகசப் பயணம் மேற்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளை உள்ளடக்கியதாகவுள்ளது. இவ் விருதினை மேற்கொள்வதற்கான வயது எல்லை 14 தொடக்கம் 24 வயது என வரையறை செய்யப்பட்டுள்ளது.
1980 களில் இவ் விருது நிகழ்வானது இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் சில காரணங்களினால் எமது மாவட்டத்திலிருந்தும் கிழக்கு மாகாணத்திலிருந்தும் பங்கு பற்றுதல்கள் கனிசமான எண்ணிக்கையை கூட எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ் வரலாற்றினை மாற்றியமைக்கும் முகமாக 2016 ம் ஆண்டிற்கான விருது நிகழ்ச்சிக்காக சிவானந்தியன் பழைய மாணவர் சங்கம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருதுப் பிரிவு மூலம் 30.05.2016 மற்றும் 31.05.2016 அன்று பி.எஸ். கௌதமதாச ( நிறைவெற்றுச் செயலாளர் ) , தேசிய குழு உறுப்பினர்களான சுமதி சந்திரிக்கா அன்பேரரசு, ஷாந்தினி குணதிலக, ஷாமரி அவபேவர்த்தனமற்றும் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை மன்ற பணிப்பாளர் ஜனாப் நைரூஸ் , அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை மன்ற பணிப்பாளர் , திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவை மன்ற பணிப்பாளர் ஆகியோரினால் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இவ்வாறான உயரிய விருதினை முதன் முதலாக கிழக்கு மாகாணத்தில் எமது மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் 40 பேர் வெண்கலப் பிரிவில் கலந்து கொண்டு இவ் எடின்பரோ சர்வதேச கோமகன் விருதினை ( The Duke of Edinburgh’s International Youth Award ) வெற்றி கொண்டு எமது மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் , எமது சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
சிவானந்தியன் இளைஞர் விருதுப் பிரிவு
விருதுத் தலைவர் : கிசோத் நவரெட்ணராஜா
வெண்கல விருது வெற்றியாளர்கள்
1.நடராஜா வித்தியாகரன்
2.வாலசிங்கம் யருசன்
3.யோகராசா ராகுலன்
4.தர்மலிங்கம் சுதிர்தரன்
5.இராசமாணிக்கம் நிதுசன்
6.பத்மநாதன் துஜிமயூரன்
7.கிரிசாந் கதிரமலை
8. கிசோத் நவரெட்ணராஜா
9.துசாந் இருதயராஜா
10.ஜெகதீஸ்வரன் சயந்தன்
ஆரையம்பதி இராமகிருஸ்ண மிசன் இளைஞர் விருதுப் பிரிவு
விருதுத் தலைவர் : சுதர்ஷனா நிறக்சன்
வெண்கல விருது வெற்றியாளர்கள்
1.இராசதுறை உசாந்தினி
2.லோகதாஸ் பிலோமினா
3.தைரியராசா டிலோசனா
4.சோமநாதப்பிள்ளை தனுஸ்கா
5.கருணாகரன் டினேஸ்கா
6.சந்திரபவன் டிலானி
7.கோணேசராஜா ருக்சினி
8.ஆனந்தன் சிப்றா
9.திவ்யராசா ராகவி
விருதுத் தலைவர் : N.சிந்து
வெண்கல விருது வெற்றியாளர்கள்
1.நித்திநாதன் ஜதுஸ்கா
2.சிவபாதசுந்தரம் சதுர்சிக்கா
3.சுவேந்திரன் தாரணி
4.முருகமூர்த்தி பிரியப்பிரணவி
5.கிருபநாதன் ரதுசிக்கா
மெதடிஸ்த மத்திய கல்லூரி விருதுப் பிரிவு
வெண்கல விருது வெற்றியாளர்கள்
1.ராஜகுமார் திவாகரன்
2.மகேந்திரன் கோகுல்நாத்
3.நேசராசா லிக்சன்
4.சிவாகரன் சஞ்சித்
5.சிறில்கரன் ஜெருசன்
6. ஜெகதீஸ்வரன் சதுஸ்டிகன்
7.சயஆனந்த சயானன்
தன்னாமுனை புனித வளனார் மகா வித்தியாலய விருதுப் பிரிவு
விருதுத் தலைவர் : பவிரேக்கா சசிகுமார்
வெண்கல விருது வெற்றியாளர்கள்
2.ரவீந்திரன் பிரகாஸ்
3.கட்ன்கயா நிரோஜன்
4.மனோகரன் டினோசியா
5.சுவேஸ்ராஜா சுவன்யா
6.நாகராசா பிரதீபன்
7.தியாகராசா ஜனுசன்
8.வேலாயுதன் கிருசாந்தன்
மற்றும் அம்பாறை மாவட்ட 40 இளைஞர்களும் விருதுகளினைப் பெற்று தங்களது பிரதேசத்திற்கும் சமுகத்திற்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளனர்.
1. Blooming Sri Lanka Open Youth Award Unit - 03 இளைஞர்கள்
2. Brave Open Youth Award Unit - 03 இளைஞர்கள்
3. Flying Horse Open Youth Award Unit - 07 இளைஞர்கள்
4. Genious Open Youth Award Unit - 06 இளைஞர்கள்
5. Mihraj Open Youth Award Unit - 04 இளைஞர்கள்
6. Relax Open Youth Award Unit - 10 இளைஞர்கள்
7. Badur Open Youth Award Unit - 01 இளைஞர்
8. Zahira College Youth Award Unit - 05 இளைஞர்கள்
இவ் விருது வழங்கல் நிகழ்வானது 06.03.2017 அலரி மாளிகையில் நடைபெற்றதுடன் பிரதம அதிதிகளாக கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அமைச்சர் மனோகணேசன் , பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் பலரும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment